நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழைமை வாய்ந்த அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில், கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டி சிறப்பு யாக வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறையில் கரோனா சிறப்பு யாகம்! - மயிலாடுதுறையில் கரோனா சிறப்பு யாகம்
நாகை: கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
special-homam-against-corono
இதையொட்டி, கோயிலிலுள்ள யாகசாலையில் கணபதி, தன்வந்திரி, அஸ்திர, மிருத்யுஞ்ஜய யாகம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. தொடர்ந்து, யாகத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு, அபயாம்பிகை மற்றும் மாயூரநாதருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில், வெளிநபர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருச்சியில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று!