தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம்! - மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம்!

நாகை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் பிரத்யேக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான, பிரத்தியோக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம்

By

Published : Aug 20, 2019, 12:43 AM IST

நாகையில் நடந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர். இதில் ஏழு மருத்துவர்களைக் கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

முகாமில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு, தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை, அதி நவீன மருத்துவ உபகரணங்கள், மாத பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஈசிஜி, பல் மருத்துவம், காது குறைபாடுகளை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான, பிரத்தியோக மருத்துவ உபகரணங்கள் அறிமுகம்!

மேலும், நாகை மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details