நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் அருள்குமார். இவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் தனியார் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அக்டோபர் 22ஆம் தேதி உயிரிழந்தார்.
அருள்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மயிலாடுதுறை மாவட்ட அனைத்து காவலர்கள் மூலம் நிதி திரட்டி முதற்கட்டமாக 3 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயை மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வழங்கினார்.