மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி ஆலயம் புகழ்பெற்ற முருகன் ஸ்தலமாகும். இங்கு முருகன் செல்வ முத்துக்குமாரசாமி அருள்பாலிக்கிறார். நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமான ஆலயமாக இது விளங்குகிறது.
மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் - etvbharat
ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
இந்நிலையில், நேற்று (ஜூலை 6) ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி கார்த்திகை மண்டபத்திற்கு வள்ளி- தெய்வானை சமேதராக எழுந்தருளினார். அங்கு அவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாதாரனை காட்டப்பட்டது. தருமபுர ஆதீன 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.