தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது சரிதான் -பொன்னார்! - supports

நாகை: டிடிவி தினகரன் ஆதரவு உறுப்பினர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது முறையான நடவடிக்கைதான் என நாகையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொன். ராதாகிருஷ்ணன்

By

Published : Apr 27, 2019, 8:05 AM IST

நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், திருப்பூண்டி பெரிய கடைத்தெரு பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி செந்தில்குமார் கடந்த 16-ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், உயிரிழந்த செந்தில்குமாரின் உறவினர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் நலன் கருதியே டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளதாக கருதுகிறேன் என்று தெரிவித்தார். மேலும், சபாநாயகர் முறையான நடவடிக்கையைதான் மேற்கொண்டுள்ளார் எனவும், இதில் விமர்சனம் செய்வதற்கு வேறு ஒன்றும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சிறுபான்மையினர் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு தீவிரவாதிகள் அடைக்கலம் தேடினால், வழிபாட்டுத்தளங்கள் பயங்கரவாதிகளின் புகலிடமாகவும், ஆயுதக் கிடங்குகளாகவும் மாறிவிடும் என்று விமர்சித்தார்.

எனவே, தீவிரவாதிகள் ஊடுருவல் விஷயத்தில் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details