தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியுரிமை பாதுகாப்பு - விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட எஸ்பி

ஃபேஸ்புக்கை பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட எஸ்பி
விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட எஸ்பி

By

Published : Sep 4, 2021, 1:53 PM IST

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. சுகுணாசிங், ஃபேஸ்புக்கை பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஃபேஸ்புக் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

நமது வீட்டுக்குள் உறவினர்கள், நண்பர்களைத் தவிர வெளிநபரை அனுமதிக்காதததைப் போல, ஃபேஸ்புக்கிலும் கடைப்பிடிக்க வேண்டும். நமது ஃபேஸ்புக்கில் யாரை அனுமதிக்கலாம் என்பதை நாம் முடிவுசெய்யலாம். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது வீட்டை பூட்டிவிட்டுச் செல்வதைப் போல, ஃபேஸ்புக்கிலும் சேஃப்டி, செக்ரியூட்டியை இயக்கி (Enable) பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கடவுச்சொல் பாதுகாப்பு

ஃபேஸ்புக்கில் நண்பர்களோ அல்லது நண்பர்களின் நண்பர்கள் மட்டுமே இணையும் வகையில் தேர்ந்தெடுக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் நமது அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை யாரும் பார்க்காத வகையில் மாற்றி அமைக்க வேண்டும். நாம் ஃபேஸ்புக்கில் இருப்பதை கூகுள், யாகூ போன்ற செயலி மூலம் யாரும் பார்க்க முடியாத வகையில் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு செய்வதன்மூலம் உங்களது ஃபேஸ்புக்கை உங்களுக்குத் தெரிந்தவர்கள் மட்டுமே பார்க்க இயலும். மேலும், சேஃப்டி பாராமீட்டர் என்ற இடத்தில், ஃபேஸ்புக், மெசஞ்சர், இ-மெயில் என்றிருக்கும் மூன்றையும் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களது கடவுச்சொல்லை வேறொருவர் திருட்டுத்தனமாக உள்நுழைய முயற்சிக்கும்போது, நீங்கள் அதனை சுலபமாகக் கண்டறிய முடியும்.

விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட எஸ்பி

மேலும், உங்களது கடவுச்சொல் யாரும் எளிதில் யூகிக்க முடியாததாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் அனைவரும் மேற்கூறியவற்றைச் செய்து, பாதுகாப்பான முறையில் உபயோகப்படுத்துகிறோமா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம்” என்றார்.

இதையும் படிங்க: காவல் நிலையங்களில் தேங்கி நிற்கும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்... மீண்டும் ஒப்படைக்க டிஜிபி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details