நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்த 15 பேர், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி சம்பவத்தை குறிப்பிட்டு தாக்குதல் நடத்திய சமுதாயத்தைப் பற்றி இழிவாகப் பேசியுள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்திலும் பதிவு செய்துள்ளனர்.
தொடரும் வீடியோ சர்ச்சை: 9 பேர் கைது! - nagai
நாகை: குறிப்பிட்ட சமுதாயத்தைப் பற்றி இழிவாகப் பேசி வீடியோ பதிவு செய்து வலைதளங்களில் வெளியிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தால் இரண்டு சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகாமல் இருக்க மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், இழிவாகப் பேசி பதிவுசெய்து வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட 15 பேர் மீது பொறையார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முதற்கட்டமாக செ.பிரேம்குமார், ரா.பிரேம்குமார், கவுதமன், ஜான்போஸ், ஜான்சன், ஆனந்தபாபு, வீரபாண்டியன், மதிவாணன், பிலிக்ஸ் பாரதி ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை விசாரித்த நீதிபதி, அவர்களை 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.