கரோனா வைரஸ் பெருந்தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இதனால், பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். இதையடுத்து, மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டது. ஆனாலும், அத்தியாவசியப் பொருள்களை வாங்கச் செல்லும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவந்தது.
சமூக இடைவெளி: வெயிலில் காத்து நின்று காய்கறி வாங்கிய மக்கள்!
நாகப்பட்டினம்: சந்தையில் சமூக இடைவெளியுடன் வெயிலையும் பொருட்படுத்தாது பொறுமையாக மக்கள் காய்கறிகள் வாங்கிச்சென்றனர்.
இந்நிலையில், இன்று நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய சந்தையில் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்தனர். ஒவ்வொருவராக வரிசையில் காத்திருந்து அத்தியாவசிய பொருள்களை வாங்கிச்சென்றனர். சமூக விலகளைக் கடைப்பிடிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், நகராட்சி சார்பில் நாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மளிகை, காய்கறிச் சந்தைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா: அரசு மருத்துவமனைக்கு மனித ரோபோக்கள் வழங்கிய மென்பொருள் நிறுவனம்