நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் பகுதியில் பள்ளி, கல்லூரி, மகப்பேறு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை ஆகியவற்றை அமைக்க ஆதீனத்துக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம், பல ஆண்டுகளுக்கு முன்பே நகராட்சிக்கு தானமாக வழங்கப்பட்டது.
தற்போது அந்த இடத்தில், மருத்துவமனைகள், கல்லூரி, பள்ளி ஆகியவுள்ளன. மேலும் இப்பகுதியில் பல ஏக்கர் நிலம் இன்னமும் உபயோகப்படுத்தப்படாமல் இருந்துவருகிறது.
இந்த இடத்தில், சமூக விரோதிகள் சிலர் இரவு நேரங்களில் ஜேசிபி இயந்திரம் கொண்டு திருட்டுத்தனமாக சவுடு மணலைக் கடத்திவருகின்றனர்.
இதனால் சமவெளியாக இருந்த அப்பகுதி, தற்போது பள்ளத்தாக்கு போன்று காட்சியளிக்கிறது. மணல் திருடப்பட்டப் பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி, அவ்வழியாக செல்லும் சிறுவர்கள், கால்நடைகள் ஆகியன தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதானால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்து, மணல் திருட்டில் ஈடுபட்டு நபர்களை தடுத்த நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கிராமத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!