மயிலாடுதுறை: காவல் உபகோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நிலுவையில் உள்ள, தான் கொடுத்த வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக செயற்பாட்டாளரும், நாம் மக்கள் இயக்கத் தலைவருமான வழக்கறிஞர் சங்கமித்திரன் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அப்புகார் மனுவில், “தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து களப்பணி ஆற்றிவரும் தன் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு பெரம்பூர் காவல் சரக எல்லையில், கூலிப்படையினர் கொடூர ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இது குறித்து பெரம்பூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
பின்னர், கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் செம்பனார்கோவில் கடைவீதியில் நடைபெற்ற கொலை முயற்சி குறித்து, செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.