மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்த பாண்டியன், சிறுவயது முதலே பாம்பை பயமின்றி பிடித்து வருவதால், அவரைப் 'பாம்பு பாண்டியன்’ என்றே அப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர். ஆரம்பத்தில் விளையாட்டாக பாம்புகளைப் பிடித்து வந்த இவர், நாளடைவில் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடித்து வனத்துறையில் ஒப்படைப்பதையே தனது தொழிலாக மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில், மயிலாடுதுறை சித்தர்காடு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் வீட்டின் கொல்லைப் புறத்தில் இரண்டு சாரைப் பாம்புகள் புகுந்துவிட்டன. இதுகுறித்து ராஜா வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க, அவர்கள் பாம்பு பாண்டியனுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.