மயிலாடுதுறை:பூம்புகார் அருகே மேலையூரில், அறநிலையத் துறைக்கு சொந்தமான பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. நேற்று (ஜூலை 10) இரவு ஆய்வு மேற்கொள்வதற்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அங்கு சென்றிருந்தார்.
தொடர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவதால் தாமதம் ஏற்பட்டு, இரவு நேரத்தில் வந்ததாக அவர் தெரிவித்தார். பின்னர் அவரது அலைபேசி வெளிச்சத்தில் கல்லூரி வளாகத்தில் உள்ள பழைய கட்டடங்களை ஆய்வு செய்தார்.
அமைச்சர் சேகர் பாபு கூட்டத்தில் புகுந்த சினேக் அப்போது, அலுவலர்களுடன் அமைச்சர் உரையாடிக்கொண்டிருந்தபோது திடீரென குட்டி பாம்பு ஒன்று கூட்டத்தில் நுழைந்தது. அது அமைச்சர் கால் அருகே ஊர்ந்து செல்வதை கண்ட என்சிசி அலுவலர், ஓடி சென்று சேகர் பாபு பாம்பை மிதித்து விடாதபடி தள்ளிவிட்டார்.
என்சிசி அலுவலர் அமைச்சரிடம் சாரி கேட்க, அமைச்சரும் கூலாக அந்த அலுவலரை தட்டிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த பாம்பு வெறும் மண்ணுளி பாம்பு என்ற அறிந்த பின்னர் கூட்டத்தில் சலசலப்பு அடங்கியது.
இதையும் படிங்க:கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா