தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு சேமிப்புப் பணத்தை வழங்கிய சிறுவன் - நாகை மாவட்டம் மயிலாடுதுறை

நாகப்பட்டினம்: உண்டியல் மூலம் சேமித்த 1100 ரூபாயை ஏழு வயது சிறுவன் முதலமைச்சரின் கரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

பணத்தை கொடுத்த சிறுவன்
பணத்தை கொடுத்த சிறுவன்

By

Published : Apr 16, 2020, 3:17 PM IST

கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை அனுப்பி உதவும்படி கேட்டுக்கொண்டார்.

பணத்தை கொடுத்த சிறுவன்

அதன் அடிப்படையில் சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் ஆங்காங்கே நாடு முழுவதும் முதலமைச்சரின் பேரிடர் நிவாரணத்திற்கு நிதி அளித்துவருகின்றனர்.

இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் செந்தமிழ்ச்செல்வன் என்பவருடைய மகன்களான அகரமுதல்வன், இனியவன் இவர்கள் விளையாட்டுப் பொருள்கள் வாங்குவதற்கு உண்டியலில் சேமித்துவைத்த ரூ.1100 பணத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் கரோனா நிதிக்காக மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணியிடம் வழங்கினர்.

பணத்தை கொடுத்த சிறுவன்

இதனைத்தொடர்ந்து இவர்களின் செயலை அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

இதையும் படிங்க: அரசின் தடை உத்தரவுக்கு எதிராக திமுக வழக்கு: உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details