தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழியில் ஆறாவது பாரம்பரிய நெல் திருவிழா: தருமபுரம் மடத்தின் 27ஆவது ஆதினம் பங்கேற்பு! - Sixth Traditional Paddy Festival

மயிலாடுதுறை: சீர்காழியில் ஆறாவது பாரம்பரிய நெல் திருவிழாவில் தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானமாக ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீர்காழியில் ஆறாவது பாரம்பரிய நெல் திருவிழா
சீர்காழியில் ஆறாவது பாரம்பரிய நெல் திருவிழா

By

Published : Aug 29, 2020, 3:56 PM IST

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலின் படி நெல் ஜெயராமன் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி வந்தார். இதில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிலையில் நெல் ஜெயராமன் சென்ற 2018 டிசம்பர் 6ஆம் தேதி புற்றுநோயால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

எனவே இந்தாண்டு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற நெல் திருவிழாவில் தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானமாக ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கலந்து கொண்டனர். இது மயிலாடுதுறையில் நடக்கும் ஆறாவது ஆண்டு நெல் திருவிழாவாகும்.

சீர்காழியில் ஆறாவது பாரம்பரிய நெல் திருவிழா

இதில் கரோனா தொற்று காரணமாக குறைந்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முன்னதாக, நெல் திருவிழாவில் பாரம்பரிய விவசாயத்திற்கு பயன்படுத்தும் அனைத்து இடு பொருள்கள், பாரம்பரிய நெல் விதைகள், அரிசி வகைகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பின்னர் விழாவில் தருமபுரம் ஆதீனத்தின் 27ஆவது குருமகா சந்நிதானமாக ஆதீனத்தின் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். அதைத் தொடர்ந்து அவர் இயற்கை விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் மணிகளை இலவசமாக வழங்கினார்.

இதையும் படிங்க: மதுரை புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு ரத்து

ABOUT THE AUTHOR

...view details