மயிலாடுதுறை ஸ்டேட் பேங்க் சாலையில் வில்லேஜ் ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் நேற்றிரவு சாப்பிட வந்த ஆறு இளைஞர்கள் ஊத்தாப்பம் கேட்டுள்ளனர். ஊத்தாப்பம் இல்லை என்று உணவக ஊழியர்கள் கூறியதால், மதுபோதையில் இருந்த இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து உணவக ஊழியர்களைத் தாக்கி அவர்களை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளனர். இந்நிகழ்வு உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து உணவக உரிமையாளர் முகமது அசரத், சிசிடிவியுடன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.