நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியை சேர்ந்த ராஜேந்திரன், சித்ரா தம்பதியினர் வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் பேரில் தனிப்படை காவலர்கள் மாறுவேடத்தில் சித்ரா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது சித்ரா, புஷ்பா, முத்துக்குமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ராஜேஸ்வரி, அமிர்தவள்ளி, கௌசல்யா ஆகியோரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.