நாகை மாவட்டம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா சிகிச்சை வார்டில் 46 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் குழுவினர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
கடந்த 21ஆம் தேதி 16 பேருக்கும், 24ஆம் தேதி 22 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்று உறுதியானதை அடுத்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆறு பேர் வீட்டுக்கு அனுப்பி வைப்பு அதனையடுத்து எட்டு பேர் மட்டும் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவர்களுக்கும் கரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தன. இதில் இரண்டு பேருக்கு சளி, இருமல் தொல்லை இருப்பதால் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளனர். மீதமிருந்த ஆறு பேரை மருத்துவக் குழுவினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க... கரை ஒதுங்கிய விநோத பொருள்: வெடிகுண்டு பீதியில் மக்கள்!