மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா விநாயகக்குடியைச் சேர்ந்தவர் அருண் (30). இவர் சீர்காழி காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்துவருகிறார். இவரது நண்பர் ராஜராஜனும் இவரும் இருசக்கர வாகனத்தில் விநாயக்குடியிலிருந்து திருமுல்லைவாசலுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
இதனையடுத்து, எடமணல் என்ற இடத்தில் முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த அருண் முயன்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்தார்.