மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவிலைச் சேர்ந்தவர் தேவா (22). இவர் அதே பகுதியில் உள்ள வாட்டர் சர்வீஸ் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
ஆயுதபூஜை என்பதால் அதிக வாகனங்கள் வாட்டர் சர்வீஸ் வந்து உள்ளதால் அதனை கழுவும் வேளையில் தேவா ஈடுபட்டிருந்தார். அப்போது வாட்டர் சர்வீஸ் செய்யும் இடத்தின் கீழே அறுந்து கிடந்த மின் ஒயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.