தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோயில் திருவிழா! - மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புத்தூர் அருகே குமிளங்காட்டில் அருள்மிகு ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோயிலில் உலக நன்மைக்காக யாகம் நடைபெற்றது.

sirkazhi Sree Suyambu Adi Nagathamman
ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோயில் திருவிழா

By

Published : Jan 31, 2021, 10:34 AM IST

சீர்காழி குமிளங்காட்டில் சுயம்பு சூலமாக எழுந்தருளி அருள்பாலிகின்ற ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை வளம் வேண்டியும், விவசாயம் தழைத்தோங்கவும் ஸ்ரீசப்தமண்டல ஆதிநாகசக்தி ஞான சுத்தி யாகம் நடைபெற்றது.

இதில் சிதம்பரம், மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றுச் சென்றனர். முன்னதாக யானை, குதிரை ,மாடு, பறவை, இயற்கையை போற்றும் விதமாக மரக்கன்றுகள், பெண்களை போற்றும் வகையில் பெண் குழந்தைகள் மற்றும் திருநங்கைகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ஸ்ரீசுயம்பு ஆதிநாகத்தம்மன் கோயில் திருவிழா

பின்னர் யாகத்தில் மரத்தில் ஆன விவசாய உபகரங்கள், தங்கம், வெள்ளி, நவரத்தினங்களும் இடப்பட்டு நாகத்தம்மனுக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதையும் படிங்க: நம்பிக்கை' அதானே எல்லாம்: கால்களாலேயே தேர்வு எழுதி சாதனை படைத்த மாணவர்

ABOUT THE AUTHOR

...view details