மயிலாடுதுறை: சீர்காழி பிடாரி வடக்கு வீதி கீழ் திசையில் சட்டைநாதர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உள்ளது. இக்கோவிலில் மூலவர் பதினெண் புராணேஸ்வரர் உடையார் ஆகவும், சௌந்தரநாயகி அம்மன் காட்சி தருகின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் மிகவும் சிதிலமடைந்துள்ளது. இக்கோவிலுக்கு திருப்பணிகள் தொடங்கி குடமுழுக்கு நடத்த தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஏற்பாட்டின் படி நேற்று பாலஸ்தாபனம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு ஹோமம் பூஜைகள் செய்து கோயில் திருப்பணிகளை அடிக்கல் நாட்டி தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்.