தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சீர்காழி சட்டநாதர் கோயில் கோ பூஜை : திரளான பக்தர்கள் வழிபாடு - large number of devotees Worship in cow pooja

மயிலாடுதுறை: பிரசித்தி பெற்ற சீர்காழி சட்டநாதர் கோயில் கோ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

சீர்காழி சட்டநாதர் கோயில் கோ பூஜை : திரளான பக்தர்கள் வழிபாடு.!
சீர்காழி சட்டநாதர் கோயில் கோ பூஜை : திரளான பக்தர்கள் வழிபாடு.!

By

Published : Mar 14, 2021, 3:16 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு சட்டைநாதர் கோயிலில் பங்குனி மாத பிறப்பையொட்டி இன்று கோ பூஜை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.

வழிபாட்டை தொடர்ந்து கொடிமரத்து விநாயகர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், தீபாராதனை காட்டப்பட்டு, கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு, கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னர் பசு, கன்றுகளுடன் பக்தர்கள் கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர்.தொடர்ந்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோ பூஜை வழிபாட்டுக் குழு பக்தர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:திருவெண்காடு தெப்போற்சவம் திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details