நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலவரவுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவரது வீட்டில் மின்கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பொதுமக்கள் தீயை அணைக்க போராடிய நிலையில், வெயிலின் தாக்கத்தாலும் காற்றின் வேகத்தாலும் தீ அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவியது.
மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் நாசம்! - fire accident
நாகை: சீர்காழி அருகே மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து ஆறு கூரை வீடுகள் எரிந்து நாசமாகின.
இதனால் அருகே உள்ள குமரவேல், ஜீவா, உத்திராபதி, முத்து உள்ளிட்ட ஆறு பேரின் கூரை வீடுகளும் தீபற்றி எரிந்தது. தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் பாதிக்கபட்ட 6 வீடுகளிலும் இருந்த 25 சவரன் தங்க நகைகள் உட்பட ரூ. 12 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து நாசமாகின.
மேலும், தீ விபத்து குறித்து வைத்தீஸ்வரன்கோயில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து ஆறு வீடுகள் தீ பீடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.