மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகைக்கடை அதிபர் தன்ராஜ் சவுத்ரியின் வீட்டுக்குள் புகுந்து அவரது மனைவி, மகன் ஆகியோரை கொலைசெய்து 12.5 கிலோ நகை, ரூ.6.90 லட்சம் ரொக்கத்தை நான்கு பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்து சென்றனர்.
இதில், தொடர்புடைய வடமாநில கொள்ளையன் மஹிபால் சிங்கை காவல் துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். மேலும் மணிஷ், ரமேஷ் பாட்டில், கர்ணாராம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு சீர்காழி நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.