மயிலாடுதுறை: ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டப்போரவைத் தொகுதியில் திமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார் மு.பன்னீர் செல்வம்.
மேள தாளத்துடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் - மேள தாளத்துடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சீர்காழி தொகுதி திமுக வேட்பாளர் மு. பன்னீர்செல்வத்திற்கு மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
![மேள தாளத்துடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் sirkazhi DMK candidate collected votes with full swing](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11165307-1083-11165307-1616752644773.jpg)
இந்நிலையில் இவர், சீர்காழி கிழக்கு ஒன்றியம் விழுந்திடசமுத்திரம், செம்மங்குடி, தில்லைவிடங்கன், திட்டை, சட்டநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி பரப்புரையை திறந்த வாகனத்தில் தொடங்கினார். அப்போது அவருக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக இருச்சக்கர வாகனத்தில் இளைஞர்கள் கொடிகளை கட்டிக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டவாறு சென்றனர். இந்தப் பரப்புரையில், கூட்டணிக்கட்சிகளான விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சினர் கலந்துகொண்டு பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.