தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூலித் தொழிலாளி தற்கொலையில் சந்தேகம்: உடற்கூராய்வு தடுத்து நிறுத்தம்! - கூலித் தொழிலாளி உயிரிழப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே செங்கல் ஆலையில் தூக்கிட்டுத் தற்கொலையில் இறந்த கூலித் தொழிலாளியின் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது உறவினர்கள் உடற்கூராய்வு செய்வதைத் தடுத்து நிறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூலித் தொழிலாளி தற்கொலையில் சந்தேகம்
கூலித் தொழிலாளி தற்கொலையில் சந்தேகம்

By

Published : Apr 19, 2021, 6:34 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சீனிவாசன். இவர், சீர்காழி நெப்பத்தூர் கிராமத்திலுள்ள வடமாநிலத்தவருக்குச் சொந்தமான தனியார் செங்கல் ஆலையில் பணியாற்றிவந்தார்.

இந்நிலையில், இவர் நேற்றைய முன்தினம் (ஏப். 17) செங்கல் ஆலையில் தூக்கிட்டுத் தற்கொலையில் உயிர் இழந்தார்.

இதனைக் கண்ட அவரது உறவினர்கள், செங்கல் ஆலையைச் சேர்ந்தவர்கள் சீனிவாசனை அடித்துக் கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டதாகக் கூறி 10 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கொடுத்த உறுதியின்பேரில் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.

அதன் பின்னர் இரவில் சீனிவாசனின் உடலை மீட்டு பலத்த பாதுகாப்புடன் சீர்காழி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இந்நிலையில் நேற்று (ஏப். 18) சீர்காழி அரசு மருத்துவமனையில் சீனிவாசனின் உடலை உடற்கூராய்வு செய்யும் பணிகள் தொடங்கின.

அதனைத் தடுத்து நிறுத்திய சீனிவாசனின் உறவினர்கள், மருத்துவர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்யக்கூடாது எனக்கூறி தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

மேலும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது.

இதையும் படிங்க: தொழிலாளி சாவில் சந்தேகம்: சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

ABOUT THE AUTHOR

...view details