தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சீர்காழி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.வி.பாரதி (61) அறிவிக்கப்பட்டுள்ளார்.
பி.காம் படித்த இவர், விவசாயம் செய்து வருகிறார். இவரின் மனைவி மாலதி இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
அதிமுக கட்சியில் வகித்த பதவிகள்:
- 1986 - 1991 திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர்
- 1988 - 1998 மாவட்ட துணை செயலாளர்
- 1995 - 2005 மாவட்ட இணை செயலாளர்
- 1996 - சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி
- 2006 - 2011 ஒன்றியக்குழு உறுப்பினர்
- 2007 - 2017 சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர்
- 2011 - 2016 ஒன்றியக்குழு தலைவர்
- 2016 - 2021 சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர்
- 2018 - 2021 மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மயிலாடுதுறை மாவட்ட அவைத்தலைவர்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கிள்ளை ரவீந்திரனை 9,003 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தற்போது சீர்காழி (தனி) சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
இதையும் படிங்க:அமமுக சார்பில் அரூர் தனித்தொகுதியில் களமிறங்கும் ஆர்.ஆர். முருகன்