தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸார்...! சரக டிஐஜி அதிரடி நடவடிக்கை - பணியிட மாற்றம் செய்யப்பட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிஸார்

கள்ளசாராயம் விற்பனை தொடர்பான சர்ச்சையில் சிக்கிய சீர்காழியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரை, கூண்டோடு பணியிட மாற்றம் செய்து, சரக காவல் துறை தலைவர், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

prohibition enforcement division  sirkali prohibition enforcement division police team transfer  sirkali prohibition enforcement division police transfer  மதுவிலக்கு அமலாக்க பிரிவு  சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு  பணியிட மாற்றம் செய்யப்பட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலிஸார்  சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்
கூண்டேடு பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸார்

By

Published : Apr 15, 2022, 10:42 PM IST

மயிலாடுதுறை: சில தினங்களுக்கு முன்பு சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி சாராயம் விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கு காவல் துறையினர் துணைபோவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், சாராய வியாபாரி சாராய வியாபாரத்தை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவலர்களிடம் அனுமதி கேட்டு நடத்துவதாக கூறியதால், பெரும் சர்ச்சை வெடித்தது. இதையடுத்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

அதில், சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் கவிதா கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போனதும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, உடனடியாக சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் கவிதாவை பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் கவிதாவுக்கு கீழ் பணிபுரிந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 பேரையும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி கயல்விழி உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 16 பேர் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையம் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இளம்பெண்களை குறிவைக்கும் இன்ஸ்டாகிராம் இம்சையரசன்.... சிக்கிய 30 மாணவிகளின் வீடியோக்கள்...

ABOUT THE AUTHOR

...view details