நாகை மாவட்டம், சீர்காழி அருகே மேல அகனி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கலியபெருமாள் (68). இவர் வீட்டின் பின்புறம் உள்ள வயல் பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு நேற்று(ஜூலை 14) இரவு பெய்த பலத்த கனமழையால், மின்கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது. இதனைப் பார்க்காமல் கலியபெருமாள் மின்கம்பியை மிதித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே கலியபெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
அறுந்து கிடந்த மின்கம்பி... உயிரிழந்த கூலித் தொழிலாளி! - Nagai District News
நாகை : சீர்காழி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
![அறுந்து கிடந்த மின்கம்பி... உயிரிழந்த கூலித் தொழிலாளி! கூலித்தொழிலாளி கலியபெருமாள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8033690-thumbnail-3x2-ngp.jpg)
கூலித்தொழிலாளி கலியபெருமாள்
இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின் இறந்து கிடந்த கலியபெருமாளின் உடலை மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:டெஹ்ராடூனில் கட்டடம் இடிந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு