மீனவர் குலத்தில் பிறந்து தொழிலாளர்களுக்காக போராடியவரும், மே தினம் உருவாகக் காரணமாக அமைந்தவருமான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 74ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையொட்டி காரைக்காலில் அரசலாற்றங்கரையில் அமைந்துள்ள சிங்காரவேலர் முழுஉருவச்சிலைக்கு, புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்த், மாவட்ட ஆட்சியர் விக்ரந்த் ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.