தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலவர் கோயில் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகொண்ட சிக்கல் சிங்காரவேலவர் கோயிலின் கந்த சஷ்டிப் பெருவிழா 28ஆம் தேதி தொடங்கி 6ஆம் முடிவடையவுள்ள நிலையில், நாள்தோறும் சிங்காரவேலவர் சுவாமி தங்க மயில் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
இந்நிலையில், சிக்கல் சிங்காரவேலவர் கோயிலின் திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் தேரினை வடம்பிடித்து தொடங்கிவைத்தனர். அதன்பின், தேரானது நான்கு மாட வீதிகள் வழியாகச் சென்று ஆலயத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, இரவு ஆலயத்துக்குள் எழுந்தருளிய முருகன், அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் பெற்றார்.