தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிக்கல் சிங்காரவேலர் ஆலய கந்த சஷ்டி விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது - ஆட்சியர் தகவல்! - nagai singaravelar function

நாகை: சிக்கல் சிங்காரவேலர் ஆலய கந்த சஷ்டி விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார்.

ikkal
sikkal

By

Published : Nov 15, 2020, 2:56 PM IST

நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உள்ளது. சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார் முருகன் என்பது வரலாறு. இத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த 25.03.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில், 16.11.2020 முதல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதித்த உத்தரவானது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும், சிக்கல் கிராமத்தில் உள்ள சிங்காரவேலர் கோவிலில் நவம்பர் 15.11.2020 முதல் 23.11.2020 வரை நடைபெறவுள்ள கந்த சஷ்டி விழாவில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details