நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள வில்லியநல்லூரைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (25). அதே மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் விவேக் ரவிராஜ். இவர் வலிவலம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் இடையே 2018ஆம் ஆண்டு முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த நட்பானது காதலாக மாறி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனால் சுபஸ்ரீ கர்ப்பமானார். இந்த செய்தி விவேக் ரவிராஜ்க்கு தெரியவர, சுபஸ்ரீயிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுபஸ்ரீயை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.
நாளடைவில் சுபஸ்ரீயிடம் பேசுவதை விவேக் ரவிராஜ் தவிர்த்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுபஸ்ரீ, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். அப்பொழுது தாம் காதலித்ததை வெளியில் கூறினால் குடும்பத்தோடு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.