தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது போதையில் பக்கத்து வீட்டுக்காரருக்கு கத்திக்குத்து - ஒருவர் கைது! - police investigation

நாகை: சீர்காழி அருகே மதுபோதையில் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

shout-out-to-a-neighbor-for-a-drink-of-wine
shout-out-to-a-neighbor-for-a-drink-of-wine

By

Published : May 18, 2020, 12:24 AM IST

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடை திறந்து, மது விற்பனை தொடங்கியதிலிருந்து, மதுபோதையில் பல்வேறு இடங்களில் பல குற்றச் சம்பவங்கள் நடந்தேறுவது வழக்கமாக மாறியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டம், சீர்காழி அருகே கீழதேனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவானந்தம் (45). இவர் தன் மகனை மதுபோதையில் தாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜி என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனையடுத்து கோபமடைந்த ராஜி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவானந்தத்தைக் குத்தி படுகொலை செய்துள்ளனர். இதில் ராஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த ராஜா, ராஜேஷ் ஆகிய இருவரை சீர்காழி காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தக் கொலை குடிபோதையில் நடந்தது என்று காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. குடிபோதையில் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ரூ.50 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details