கரோனா பரவலைத் தடுப்பு மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாளை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து நாகூர் வர்த்தகர் சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு ஊரடங்கு குறித்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது. நாகூர் தர்கா, மீனவர்கள் கிராமம், சிவன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்ட ஒலிப்பெருக்கி அறிவிப்பில், பிரதமரின் அறிவிப்பை ஏற்று பொதுமக்கள் யாரும் நாளை காலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.