மகா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைந்துள்ள பிரம்மன் வழிபாடு செய்த ஸ்தலமும், நவக்கிரகங்களில் புதன் ஸ்தலமுமான அருள்மிகு பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது.
மகா சிவராத்திரி - திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் நாட்டியாஞ்சலி - ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி
நாகப்பட்டினம்: சீர்காழி அருகே திருவெண்காடு புதன் ஸ்தலத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய நாட்டியாஞ்சலி நடைபெற்றது.
sivarathiri
இக்கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான கலைஞர்கள் பங்குபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு நாட்டியாஞ்சலியை ரசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பரதநாட்டியம் ஆடிய பெண்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க:மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரகதீஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி