தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களுக்கு எப்போது கிடைக்கும் இலவச மடிக்கணினி? - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகப்பட்டினம்: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்கப்படாத இலவச மடிக்கணினியை உடனடியாக வழங்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர், மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

SFI
SFI

By

Published : Jul 28, 2020, 6:49 AM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினியை வழங்கக்கோரி கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அந்தப் புகார் மனுவில், "பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் மடிக்கணினி 2017ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவர்களுக்கு இது வரை வழங்கப்படவில்லை. இதனால், கரோனா பொதுமுடக்கத்தால், பள்ளிகளில் நடத்தப்படும் இணைய வழி கல்வியை பெறமுடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.

எனவே, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் விலையில்லா மடிக்கணினியை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அதபோன்று மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பையில் உள்ள தனியார் பள்ளியில் நடத்தப்படும் இணைய வழிக் கல்விக்கு கட்டணம் செலுத்த முடியாத ஏழை, எளிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

அப்பள்ளியின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வேலூரில் ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது!

ABOUT THE AUTHOR

...view details