தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு - Nagapattinam District Latest News

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறி, ஆசிரியரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பள்ளிக்கு பொதுமக்கள் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசிரியர்

By

Published : Nov 8, 2019, 7:32 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு அடுத்த முடிகண்டநல்லூர் கிராமத்திலுள்ள ஆதி திராவிடர் நலப்பள்ளியில் பிரேம்குமார் (28) என்பவர் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவர் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அந்த மாணவியை செல்ஃபோனில் படம் எடுத்து மிரட்டியதாகவும் மாணவியின் பெற்றோர், உறவினர் குற்றம் சாட்டி பள்ளியை முற்றுகையிட்டனர்.

மாணவி படித்த பள்ளி

பின்னர் அவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து, பள்ளியில் இருந்து மாணவர்களை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டுப் போட்டனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் ஆசிரியர் பிரேம் குமாரை மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆசிரியர் பிரேம்குமார் புதுமை படைக்கும் ஆசிரியருக்கான விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழிக்கப்பட்ட பேனர்
அரசுப் பள்ளி

இதையும் படிங்க:ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details