நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோடங்குடியில் பழமை வாய்ந்த ஸ்ரீ அருள்மிகு கௌரி மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் சித்திரை மாதத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் 12ஆம் நாள் திருவிழாவான நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறை ஸ்ரீ கௌரி மாரியம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
நாகை: மயிலாடுதுறை அருகே கோடங்குடியில் பழமை வாய்ந்த ஸ்ரீ அருள்மிகு கௌரி மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழாவில் திரளான பகதர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
இதனை முன்னிட்டு சக்தி கரகம், ஊர்வலமாக ஆலயத்தில் வந்து அடைந்தது. அங்குள்ள தீக்குண்டத்தில் விரதம் இருந்து நூற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்பாளுக்கு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து தீ மிதி உற்சவத்தின்போது காளி ஆட்டம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது