நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த செண்பகராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி (85). இவரது கணவர் முருகேசன் இறந்து விட்ட நிலையில், மகன்கள் இரண்டு பேர் வெளியூரில் வசித்து வருகின்ற நிலையில், இவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு (ஆகஸ்ட்.17) இவர் வளர்த்த நாய்க்கு விஷம் வைத்து கொன்ற அடையாளம் தெரியாத நபர்கள், பின் வீட்டின் மேற்கூரையை வழியாக உள்ளே சென்று மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் பீரோவில் வைத்திருந்த செயின், வளையல், கம்மல் உட்பட ஏழு சவரன் நகை, 10 ஆயிரம் ரொக்க பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர்.
மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 7 சவரன் நகை கொள்ளை! - தங்க நகைகள் கொள்ளை
நாகப்பட்டினம்: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஏழு சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கொள்ளை
இதுகுறித்து தகவலறிந்த கரியாப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.