தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகூர் தர்காவில் தொழுகையில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

நாகப்பட்டினம்: ஊரடங்கு உத்தரவை மீறி, நாகூர் தர்கா வாசல் முன்பு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் கட்சி பிரமுகர் உள்ளிட்ட 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிரார்த்தனையில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு
பிரார்த்தனையில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு

By

Published : May 27, 2020, 11:21 PM IST

ஊரடங்கு உத்தரவின் காரணமாக கோயில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி வழிபடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி, நேற்று (மே 26) நாகப்பட்டினத்தில் உள்ள தென்னகத்தின் புகழ்பெற்ற நாகூர் தர்கா வாசல் முன்பு ரமலான் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர்.

தர்கா கால் மாட்டு வாசலில் கூடி தொழுகை செய்தவர்கள் மீது நாகை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வநாக ரத்தினம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நாகூர் நகர காவல் துறையினர், ஊரடங்கு உத்தரவை மீறியதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி சிறுபான்மைபிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் நவ்ஷாத் பாபு, நாகூர் நகர திமுக முன்னாள் செயலாளர் ராஜா என்கின்ற சாகுல் ஹமீது உள்பட 7 பேர் மீது 188, 143, 269 ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து யாவரும் குணமடைய நாகூரில் வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details