தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் -  நடவடிக்கை எப்போது? - பள்ளி செல்லும் மாணவர்கள்

நாகை: மயிலாடுதுறை அருகே உள்ள செட்டிக்கட்டளை கிராமத்தில் சாலை சேதமடைந்து சேறும் சகதியுமாக உள்ளதால் பள்ளி செல்லும் மாணவர்கள்  மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

settikattalai road issue

By

Published : Nov 3, 2019, 11:05 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி ஊராட்சிக்குட்பட்ட செட்டிக்கட்டளை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இக்கிராமத்தைச்சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஓடக்கரை கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயின்றுவருகின்றனர்.

இவர்கள் பள்ளிக்குச் செல்லவதற்கு ஓடக்கரை பாதை என்கிற ஒரு வழி மட்டுமே உள்ளது. சுமார் இரண்டு கி.மீ தொலைவுள்ள இந்தப் பாதையானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தச்சூழலில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் இச்சாலை சேறும் சகதியுமாகவுள்ளது.

சேறும் சகதியுமாக இருக்கும் செட்டிக்கட்டளை சாலையை கடந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள்

பள்ளிக் குழந்தைகள் கடந்த ஒருவாரமாக சேற்றைக் கடந்தவாறே பள்ளிக்குச்செல்கின்றனர். இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இது குறித்து பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மோசமான நிலையில் உள்ள சாலையைப் போர்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நாகை அருகே ராட்சத ஆழ்துளைக் கிணறு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details