நாட்டின் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றுவருகிறது.
கருணாநிதி, ஜெயலலிதா ஆளுமைகள் இல்லாத தேர்தல்! - வாக்காளர்கள் என்ன சொல்கிறார்கள்? - Poll daY
நாகபட்டினம்: கருணாநிதி, ஜெயலலிதா ஆளுமைகள் இல்லாத தேர்தல் குறித்து வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கு சற்று வித்தியாசமான தேர்தல். அரசியல் ஜாம்பவான்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத தேர்தல். புதிய தலைவர்களை மக்கள் கண்டெடுக்கும் தேர்தல்.
இது குறித்து மூத்த வாக்காளர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத தேர்தலை நாங்கள் முதல் முறையாக சந்திக்கின்றோம். இருப்பினும் வாக்களிக்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அவர்கள் இல்லாத சூழலிலும் அவர்களைச் சார்ந்த கட்சியினர் சிறப்பாக செயல்படுவதால், புதியவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்படவில்லை. பழைய கட்சியினரை வாக்களித்து தேர்ந்தெடுப்போம்’ என கருத்துத் தெரிவித்தனர்.