மயிலாடுதுறை: தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடை மற்றும் இனிப்பு உணவு வகைகள் தான். அந்த வகைகளில் பண்டிகை காலங்களை முன்னிட்டு, இனிப்பகம் உள்ளிட்ட கடைகளில் ஸ்பெஷலாக திண்பண்டங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் இனிப்பகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் புது முயற்சியாக 15 கிலோவில், பாலை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட அணுகுண்டு வடிவிலான சுவீட், 30 கிலோ எடையில் பூந்தியால் தயார் செய்யப்பட்ட 3 அடி உயரமுள்ள புஷ்வானம், ராக்கெட், 2 கிலோ எடை கொண்ட சங்கு சக்கரம் உள்ளிட்ட பட்டாசு வடிவிலான இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும், குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் ஓமம் கலந்த குச்சி பிஸ்கட், பட்டர் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், மற்றும் எள்ளுமிட்டாய் உள்ளிட்ட திணைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மிட்டாய் வகைகள் என நூற்றுக்கணக்கான இனிப்புகளும், மிட்டாய் ரகங்களும் விற்பனைக்கு வந்துள்ளன.