தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வசூல் வேட்டை நடத்தும் கடன் நிறுவனங்கள் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

நாகப்பட்டினம்: கரோனா ஊரடங்கு காலத்தில் சுய உதவிக்குழுக்களிடம் நுண் கடன் நிறுவனங்கள் வசூல் வேட்டை நடத்திய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வசூல் வேட்டை நடத்தும் கடன் நிறுவனங்கள் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
வசூல் வேட்டை நடத்தும் கடன் நிறுவனங்கள் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

By

Published : May 12, 2021, 7:15 PM IST

கரோனா இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள வங்கிகள், நுண் கடன் நிறுவனங்கள் வசூலில் ஈடுபடக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு அரசின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு நாகப்பட்டினத்தில் ஊரடங்கு காலத்திலும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன, சில நுண் கடன் நிறுவனங்கள். நாகப்பட்டினம் மாவட்டம், தியாகராஜபுரம் பகுதிக்கு, இன்று(மே 12) காலை வந்த 'கிராம விடியல்' என்ற கடன் வழங்கும் நிறுவன ஊழியர் அப்பகுதி மக்களைப் பணம் கட்டச் சொல்லி நிர்பந்தம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளன.

சமூக வலைதளங்களில் பரவிய வசூல் வேட்டை வீடியோ

கரோனா விதிகளை மீறி முகக்கவசம் அணியாமல், அப்பகுதி மக்களை ஒன்று கூட்டி, கூட்டம் நடத்தும் அந்த நிறுவன ஊழியரின் செயலை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இதேபோல நாகை அடுத்துள்ள வெங்கிடாங்கால் பகுதியைச் சேர்ந்த தமிழ் என்பவரிடம் L & D சுய உதவிக்குழு நிறுவன ஊழியர் பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருமருகல் ஒன்றியம், அம்பல் ஊராட்சி, காமராஜர் தெருவில் எக்விடாஸ் நுண் கடன் நிறுவன ஊழியர்கள் இன்று(மே 12) காலை வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கால் பணிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கிராம மக்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கடன் தொல்லையால் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details