தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலங்கைக்கு கடத்தவிருந்த 750 கிலோ விரலி மஞ்சள், 60 கிலோ ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல் - இருவர் கைது! - Seizure of 750 kg virali manjal

நாகப்பட்டினம்: இலங்கைக்கு கடத்தவிருந்த 750 கிலோ விரலி மஞ்சள், 60 கிலோ ஏலக்காயை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

By

Published : Jan 20, 2021, 7:26 PM IST

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட நாலுவேதபதி கிராமத்தில் உலகநாதன்காடு பகுதியைச் சோ்ந்தவர் கிருஷ்ணமூா்த்தி (56). இவரது வீட்டில் விரலி மஞ்சள் மூட்டைகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோரக் காவல் குழும காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆய்வாளா் ராஜா தலைமையிலான காவலர்கள் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது 30 மூட்டைகளில் 750 கிலோ மஞ்சள், 3 மூட்டைகளில் 60 கிலோ ஏலக்காய் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றை பறிமுதல் செய்த காவலர்கள், மஞ்சள், ஏலக்காய் ஆகியவற்றை பதுக்கிவைத்திருந்த கிருஷ்ணமூா்த்தி, கஞ்சமலைக்காடு சத்தியராஜ் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details