தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரில் கடத்தி வரப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் - சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

மயிலாடுதுறை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்
சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

By

Published : Jan 14, 2022, 6:59 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் மாத்தூர் சாலையில் செம்பனார்கோவில் காவல் துறையினர் காவல் ஆய்வாளர் செல்வி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வந்தவரிடம் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப்பின் முரனாக பதிலளித்துள்ளார்.

அவரை பின்தொடர்ந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு பேர் 5100 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 400 சாராய குவாட்டர் பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணை

இதனையடுத்து உடனடியாக காரில் வந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததில் காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு பொங்கல் பண்டிகை விடுமுறை தினத்தில் விற்பனைக்காக சாராயத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.

பறிமுதல்

பின்னர் காவல் துறையினர் 6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான சாராய பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாட்டை சேர்ந்த கார் டிரைவர் ராஜ் (26), மன்னம்பந்தலை சேர்ந்த குமார் (36), திருக்களாச்சேரியை சேர்ந்த முருகேசன் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க:சென்னையில் இளம்பெண் மருத்துவர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details