தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணமே இங்கு செல்லாது - சீறும் சீமான்

இந்தியா எதை நோக்கியும் செல்லாது. பணமே இங்கு செல்லாது. இதை நான் கூறினால் நான் ஆன்ட்டி இந்தியன், தேச துரோகி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

By

Published : Aug 27, 2021, 8:06 AM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள வந்த சீமான் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ராணுவம், தொடர்வண்டி, மின் உற்பத்தி உள்ளிட்ட அனைத்தையும் தனியாரிடம் கொடுத்துவிட்டால் அரசு எதை நிர்வகிக்கும். இதை முழுமையாக நாங்கள் எதிர்க்கிறோம். இந்தக் கொள்கையை அதிமுக பாஜக கூட்டணியில் இருப்பதால் வேறு வழியில்லாமல் ஆதரிக்கிறது.

நாட்டின் முதல் குடிமகனுக்கே இப்படியான நிலைமையா

மத்திய அரசு சிறு குறு தொழில்கள், விவசாயிகளுக்கு உதவி செய்வது போல் கடன் உதவி வழங்குகிறது. ஆனால் அந்தக் கடன்களுக்கு வட்டி பெற்றுக் கொள்கிறது. கந்துவட்டிக்காரன்கூட கடன் உதவி வழங்குவான். இது ஏற்றுக்கொள்ள முடியாது. இழப்பிலிருந்த வங்கிகளை அரசு அரசுடைமையாக்கியது.

ஆனால் லாபத்திலிருந்த எல்ஐசி நிறுவனத்தைத் தனியாருக்கு எதற்குக் கொடுக்க வேண்டும். அதானி ஃபாம், அதானி ஏர்போர்ட், அதானி குவாட்ரஸ், அதானி துறைமுகம்போல ஐந்து ஆண்டுகளில் இந்தியாவும் அதானி இந்தியாவாக மாறிவிடும்" என்றார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டியல் இன எழுத்தாளரின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு, "மக்களை மனிதர்களாக மதிக்காத நாடு இது. நாட்டின் முதல் குடிமகனான ராம்நாத்கோவிந்தை கோயில் உள்ளே அனுமதிக்கவில்லை. வாசலில் நின்று பூஜை செய்து சென்றார். இந்த நிலைதான் இருந்துவருகிறது.

வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை

இந்தியா எதை நோக்கியும் செல்லாது. ஏன் என்றால் பணமே செல்லாது. இது வேடிக்கையான நாடு. இதை நான் கூறினால் என்னை ஆன்ட்டி இந்தியன், தேச துரோகி என்று கூறுவார்கள். ஏற்கெனவே என் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் உள்ளது. தேசத்தை நாசமாக்கி விற்பவன் இன்று தலைவன் என்ற கொடுமை நடந்துகொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை நாங்கள் முதலில் வரவேற்கத்தான் செய்தோம். தற்போது பெண்கள் துன்புறுத்துவது, தொடுவது போன்ற அநாகரிகச் செயலில் ஈடுபட்டுவருகின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலக அரசியல் பார்வை, புரிதல் இல்லாத குழுவாக உள்ளது தாலிபான் அமைப்பு. அவர்கள் செயல்பாடு பொறுத்திருந்துதான் தெரியவரும்.

ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காகத் தொடங்கப்பட்டது என்பது ஒரு போக்கு. இந்த ஆலை திரவ வடிவத்தில் உள்ள பொருள்களை மட்டும் உற்பத்தி செய்ய முடியும் என விஞ்ஞானிகள்கூட அப்போது விமர்சனம் செய்தனர். ஆனால் விடாப்பிடியாக அதானி உள்ளிட்ட முதலாளிக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

மீத்தேன், ஈத்தேன் எடுப்பதற்குப் பல ஒப்பந்தங்களை அதானி, அம்பானி, வேதாந்தா நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மனு கொடுக்கவந்த 15 நபர்களைச் சுட்டுக்கொன்றது அரசு. அரசு தாமிர தட்டுப்பாடு குறித்து கவலைப்படாமல் தண்ணீர் தட்டுப்பாட்டைப் பற்றி கவலைப் பட வேண்டும். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துத்தான் போட்டியிடும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details