மயிலாடுதுறை:சீர்காழி அருகே கரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கரோனாவால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு! - கரோனா மரணம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் அருள் குமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
![கரோனாவால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு! seekazhi corona affected ssi died](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9276915-941-9276915-1603385901468.jpg)
seekazhi corona affected ssi died
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் அருள் குமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இச்சூழலில், அவர் இன்று (அக். 22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் பணியாற்ற கூடிய ஏழு காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது காவல் துறையினர் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.