மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, அனந்தமங்கலம், திருக்கடையூர், நல்லாடை ஆகிய இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி நெல் விதைப்பு மற்றும் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணிகள், இயந்திர குறுவை நடவு ஆகியவற்றை நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரும் பணியை பார்வையிட்டு நடைபெற்ற பணிகள் குறித்து புகைப்படக் கண்காட்சியும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அவர் ஆய்வுசெய்ய மாவட்ட அளவிலான தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்குத் தடை செய்யும் விதத்தில், நைலான் கயிறு கொண்டு காவல் துறையினரால் தடுக்கப்பட்டனர். ஒரு சில பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.